மும்பையின் அடையாளமாகத் திகழும் கேட்வே ஆஃப் இந்தியா அருகே, நபர் ஒருவர் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோவில், அந்த நபர் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை எவ்வித அச்சமுமின்றி கடலில் வீசுவதைக் காண முடிகிறது.

மேலும் “இது நல்லதல்ல” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியாவின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் பொது இடங்களின் பராமரிப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். மும்பை போன்ற பெருநகரங்களில் கடல் மாசுபாட்டைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது குறிப்பாக, வெளிநாட்டுப் பயணியின் கேமராவில் இக்காட்சி சிக்கியது இந்தியாவின் சர்வதேச பிம்பத்திற்குப் பின்னடைவாக அமைவதாகவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் கடைக்கோடி மக்களிடம் சென்றடைய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.