தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகையான 3,000 ரூபாயைத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தொண்டர்கள் அனைவரும் தயக்கமின்றிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தீவிர ஆதரவாளர் லயோலா மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3000 இல்ல 30000 கொடுத்தாலும் வாங்கிக்கோங்க… லயோலா மணி பரபரப்பு பேச்சு | Maalaimalar
#LoyolaMani #ViralSpeech #tk #tvkvijay #news #mmnews #maalaimalar pic.twitter.com/I0EVwaWFqG
— Maalai Malar தமிழ் (@maalaimalar) January 13, 2026
“>
இது குறித்து அவர் பேசுகையில், “திமுக அரசு வழங்கும் பணம் என்பதால் சுயமரியாதை கருதி நமது தவெக தம்பிகள் பலர் அந்தப் பணத்தை வாங்க மறுப்பதாகத் தெரிகிறது. ஆனால், இது திமுக-வின் சொந்தப் பணம் அல்ல; இது மக்களின் வரிப்பணம், அதாவது நமது பணம். நான் ஏற்கனவே 3,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டேன், நீங்களும் வாங்குங்கள். இந்த நேரத்தில் மானம், சூடு, சொரணை என்று பார்க்கத் தேவையில்லை. தோளில் தவெக துண்டை போட்டுக்கொண்டு ரேஷன் கடைக்குச் சென்று தைரியமாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
திமுக-வை ‘தீயசக்தி’ எனக் கடுமையாக விமர்சித்தபடி, அரசு வழங்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
