இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக்கின் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சேவாக்கின் மணவாழ்க்கை கிரிக்கெட் உலகில் ஒரு முன்மாதிரியாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவி வருகின்றன. இந்த விவகாரத்தில் சேவாக்கின் மனைவியுடன் மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரின் பெயர் தொடர்புபடுத்தி பேசப்படுவது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சேவாக்குடன் இணைந்து விளையாடிய ஒரு வீரருடன் ஏற்பட்ட நெருக்கமே இந்த விரிசலுக்குக் காரணம் எனச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் இந்தத் தகவல்கள் குறித்து சேவாக்கோ அல்லது அவரது மனைவி ஆர்த்தியோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களது வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பு விளையாட்டு வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.