குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் ஆடை மாற்றுவதை உடனே நிறுத்த வேண்டும் என்று ஒரு பெண் மருத்துவர் பேசும் காணொளி இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பிஞ்சு மனதிலேயே ‘நிர்வாணம்’ மற்றும் ‘தனிமனித ரகசியம்’ (Privacy) குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் அதில் வலியுறுத்துகிறார். சிறு வயதிலேயே உடல் குறித்த விழிப்புணர்வை அளிப்பதுதான், பிற்காலத்தில் அவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளில் இருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்ள உதவும் சிறந்த வழி என்று அந்த மருத்துவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
IF YOU CHANGE YOUR CLOTHES IN FRONT OF YOUR YOUNG CHILD, STOP IT!
NUDITY AND PRIVACY CONCEPTS SHOULD BE TAUGHT AT THAT YOUNG AGE
WATCH, SHARE AND REPOST.
Nudity and privacy are concepts that should be taught at that young age. It is the best way to teach children how to… pic.twitter.com/m9txYlzCfI
— Dr. Ose Etiobhio (@osemagnum) January 9, 2026
பெற்றோர்கள் தங்கள் உடல் மீதான மரியாதையை குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இந்த வைரல் வீடியோவின் முக்கிய நோக்கமாகும். “உடல் பாதுகாப்பு” மற்றும் “தற்காப்பு உத்திகளை” குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க இதுவே சரியான பருவம் என்றும் அந்த மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தகவலைப் பார்த்த பலரும், “இது இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு அறிவுரை” என்று பாராட்டி, அந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
