தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி போட்டியிடுவார் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்காக பாமக தரப்பில் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஸ்ரீகாந்தி எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் அல்லது பாமக எந்தக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் என்பது குறித்த விவரங்களை ராமதாஸ் தற்போது வெளியிடவில்லை. அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் நிலையில், ராமதாஸின் இந்தத் தனிப்பட்ட அறிவிப்பு அரசியல் களத்தில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
