சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணின் வேடிக்கையான செயல் தற்போது நெட்டிசன்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. அந்தப் பெண், தனது பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மிகவும் ஆர்வமாக அந்த வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அவர் கண்காணித்துக் கொண்டிருந்த அதே வீட்டில் ஒரு சிசிடிவி (CCTV) கேமரா பொருத்தப்பட்டிருந்தது அவருக்குத் தெரியவில்லை. அவர் மறைந்திருந்து வேவு பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அந்த கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகிவிட்டது.

​இந்தக் காணொளியைக் கண்ட இணையவாசிகள், அந்தப் பெண்ணின் ஆர்வத்தைப் பார்த்து வியந்துப் பல வேடிக்கையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். “பக்கத்து வீட்டுப் பஞ்சாயத்துன்னா இவ்வளவு ஆர்வமா?” என்றும், “அடுத்த முறை வேவு பார்க்கும்போது கேமரா இருக்கான்னு செக் பண்ணிட்டுப் போங்கம்மா” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். திருட்டுத்தனமாகப் பார்க்கப்போய், கடைசியில் ஊருக்கேத் தெரியும்படி கேமராவில் சிக்கிய இந்தப் பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரல்!