சாலை ஓரத்தில் வீணாகக் கிடக்கும் செங்கல்லைக் கொண்டு நவீன ஒலிபெருக்கியைத் தயாரித்து அசத்தியுள்ள இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்த இளைஞர் முதலில் ஒரு சாதாரண செங்கல்லை எடுத்து அதன் உட்புறத்தைச் செதுக்கி ஒலிபெருக்கி பொருத்துவதற்கான இடத்தைச் சீரமைக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sabke Bhaiya JI (@deluxebhaiyaji)

பின்னர் அதன் மேல் மின்னும் வண்ணம் பூசி, கவர்ச்சிகரமான முறையில் வடிவமைத்து சந்தையில் விற்பனைக்கு வைக்கிறார். பார்ப்பதற்கு அழகாகவும் தனித்துவமாகவும் இருக்கும் இந்த செங்கல் ஒலிபெருக்கியை ஒரு வாடிக்கையாளர் 2 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்த ஆக்கப்பூர்வமான முயற்சியைப் பாராட்டும் இணையவாசிகள், சரியான யோசனை இருந்தால் சாதாரணப் பொருட்களையும் மதிப்புமிக்கதாக மாற்றலாம் என்பதற்கு இதுவே சான்று என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.