உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு வந்த மர்ம நபர்கள் பகல் நேரத்திலேயே ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைப் பெட்டியைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
<a href=”http://
बांदा : दिनदहाड़े सर्राफ की दुकान से टप्पेबाजी
➡गहनों से भरा डिब्बा लेकर चोर फरार
➡ग्राहक बनकर आए चोरों ने की करतूत
➡15 लाख के गहने से भरा डिब्बा लेकर फरार
➡गहने का डिब्बा ले जाते चोर CCTV में कैद
➡कालिंजर थाना क्षेत्र के कस्बे का मामला#Banda #Theft #Jewelry #CCTVFootage… pic.twitter.com/SiqhokF1vO— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) January 6, 2026
“>
கடைக்கு வந்த இருவரில் ஒருவர், கடை உரிமையாளரிடம் பல்வேறு நகைகளைக் காட்டும் படி கூறி அவரது கவனத்தைத் திசைதிருப்பியுள்ளார். அந்தச் சமயத்தில், மற்றொரு நபர் கவுண்ட்டரில் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த நகைகள் அடங்கிய பெட்டியை நைசாக எடுத்துத் தனது ஆடையின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராதவாறு கடையை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படைகள் அமைத்துத் தலைமறைவாக உள்ள கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
