ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு குடியிருப்பில் புகுந்த திருடன் ஒருவன், எதிர்பாராத விதமாக சமையலறை புகைய்போக்கி துவாரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் புனித யாத்திரை சென்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பி உள்ளார்.

மேலும் சமையலறையில் யாரோ முனகும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, குறுகிய ஜன்னல் துவாரத்தின் வழியாக வெளியேற முயன்ற திருடன், இடுப்பு வரை உள்ளே சிக்கி நகர முடியாமல் தவிப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

“>

இந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த நபரை மீட்டனர். பிடிபட்ட திருடன், வீட்டின் உரிமையாளர்கள் இல்லாததை அறிந்து திருட முயன்றதும், தப்பிக்க வழி தெரியாமல் புகைய்போக்கி துவாரத்தை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விசித்திரமான திருட்டு முயற்சியும், திருடன் தலைகீழாகச் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.