மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், ஈரோடு வில்லரசம்பட்டியில் நேற்று நடந்த விவசாயிகள் மாநாட்டில் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். திமுக அரசுக்கு ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்றும், மாநிலம் முழுவதும் சாராயம் ஆறாக ஓடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

​தமிழக அரசு தற்போது சாராய விற்பனை மூலம் வரும் வருமானத்தை நம்பியே இயங்கி வருவதாகவும், இது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். இறுதியாக, “திமுக என்ற தீய சக்தியைத் தமிழகத்தில் இருந்து வீழ்த்த வேண்டும்; இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும்” என்று அவர் விவசாயிகளிடையே ஒரு வலிமையான கோரிக்கையை வைத்தார்.