சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பலரது மனதை நெகிழச் செய்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு காருக்குள் நாய் ஒன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. காரைச் சுற்றி தண்ணீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், மீட்புக் குழுவினர் சமயோசிதமாகச் செயல்பட்டு படகு மூலம் காரின் அருகே சென்றனர்.

காரின் கண்ணாடியை உடைத்து, அந்த நாயைப் பத்திரமாக மீட்டுத் தங்களது மடியில் வைத்து அழைத்துச் சென்றனர். மீட்புக் குழுவினரின் இந்தத் துணிச்சலான செயலைப் பார்த்த நெட்டிசன்கள் அவர்களை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. நாயைக் காப்பாற்றிய நபருக்கு அது எப்போதும் நன்றியுடன் இருக்கும் என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இந்த வீடியோவின் தத்ரூபமான காட்சிகளைக் கண்ட சிலர், இது செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

“>

 

எது எப்படியோ, ஆபத்தில் இருந்த ஒரு உயிரைக் காக்கும் இந்த காட்சிகள் இணையத்தில் பெரும் விவாதத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.