தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் தன்னுடைய 173-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முன்னதாக சுந்தர்சி இயக்குவதாக அறிவித்திருந்த நிலையில் பின்னர் ரஜினிக்கு கதை பிடிக்காததால் சுந்தர் சி மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படத்தை இயக்கிய சிபிச்சக்கரவர்த்தி தற்போது ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்ட அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
