தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது ஜனநாயகன்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியது. இந்த டிரைலர் வெளியாகிய சில நிமிடங்களிலேயே 5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மெகா சாதனை படைத்துள்ளது. மேலும் இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
