தமிழகத்தில் உள்ள 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தை வருகிற ஜனவரி 8-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பரிசுப் பொருட்களுடன் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,000 முதல் ₹3,000 வரை ரொக்கப் பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
