சமூக வலைதளங்களில் ஒரு சிறுமி ஆடும் நடன வீடியோ தற்போது ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் வாயடைக்க வைத்துள்ளது. வெள்ளை நிற பாவாடை மற்றும் நீல நிற சட்டை அணிந்த அந்த சிறுமி, ஒரு தேர்ந்த நடனக் கலைஞரைப் போல மிக நேர்த்தியாகவும், முகபாவனைகளை (Expressions) கச்சிதமாகவும் வெளிப்படுத்தி ஆடுகிறார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, ஏற்கனவே லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி குவித்துவிட்டது.
View this post on Instagram
சிறுமி ஆடும் அந்த நடனம் எந்தவொரு பிசிறும் இல்லாமல் மிக மென்மையாக (Flawless) இருப்பதால், இது உண்மையானது தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு சிறுமி இவ்வளவு துல்லியமாக ஆட முடியுமா என வியக்கும் நெட்டிசன்கள் சிலர், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்குமோ எனச் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
திறமையைப் பாராட்டுபவர்கள் ஒருபுறம் இருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் எது உண்மை எது பொய் எனத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.’
