தேவையில்லாமல் காளையை வம்புக்கு இழுத்த முதியவர் ஒருவர், அதனால் நேர்ந்த விபரீதத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி மாலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், வீட்டின் முன் நின்றிருந்த காளையைக் கண்டதும் ஆவேசமடைந்த அந்த முதியவர், அங்கிருந்த கல்லை எடுத்து அதன் மீது எறிந்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த காளை உடனடியாக அவரைத் தாக்க முற்பட்டது. அருகில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் பின்னே ஒளிந்து கொண்டு அவர் தப்பிக்க முயன்ற போதிலும், ஆக்ரோஷமான காளை அவரை விடாமல் துரத்தியது. அங்கிருந்து அவர் எப்படியோ தப்பி ஓடிய நிலையில், வீணாக விலங்குகளைத் துன்புறுத்துவது ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.