தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த பிறகு அவரின் ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் அதிமுகவில் இருந்து விலகி இணைந்து வருகின்றனர். ஜனவரி முதல் வாரத்திற்குள் அதிமுகவிலிருந்து யார் யார் விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார்கள் என்பது தெரியவரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அரவக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரியமுல் ஆசிமா தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் இணைந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இது அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
