மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் திரண்டு காத்திருந்தனர்.

விஜய் வெளியே வந்தபோது, அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டனர்.

“>

 

அவர் பத்திரமாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும், இந்தச் சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.