சீனா தனது வியட்நாம் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக ‘Walker S2’ என்ற மனித உருவ ரோபோக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக சீன அரசு சுமார் 310 கோடி ரூபாய் ($37 மில்லியன்) மதிப்பிலான ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த மாதமே இந்த ரோபோக்கள் எல்லைப் பகுதிகளில் பணியில் அமர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரோபோக்கள் மனிதர்களைப் போலவே கை, கால்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 15 கிலோ எடையைத் தூக்கும் திறன் கொண்டவை மற்றும் தங்களின் பேட்டரிகளைத் தாங்களே மாற்றிக்கொள்ளும் வசதி கொண்டவை. அதிநவீன கேமராக்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் வசதி (Night Vision) கொண்ட இந்த ரோபோக்கள், எல்லையில் பயணிகளுக்கு வழிகாட்டுவது, வாகனங்களைச் சரிபார்ப்பது மற்றும் சரக்கு பெட்டிகளின் எண்களைக் கண்காணிப்பது போன்ற வேலைகளைச் செய்யும்.
