அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரேவும், துணை கேப்டனாக விஹான் மல்ஹோத்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி உள்ளிட்ட 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். உலகக் கோப்பைக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே மற்றும் விஹான் மல்ஹோத்ரா இந்தத் தொடரில் பங்கேற்காததால், வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகவும், ஆரோன் ஜார்ஜ் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள். பெனோனியில் நடைபெறும் இந்தப் போட்டிகள் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளன.