மத்தூரா மாவட்டம் சுரீர் பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயான பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து காதலனுடன் சென்ற வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன தனது மனைவியைத் தேடித் தருமாறு பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அந்தப் பெண் பிரோசாபாத் மாவட்டத்தில் கபில் என்ற இளைஞருடன் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அவரை மீட்டு கணவரிடம் ஒப்படைக்க முயன்றபோது, அவர் தனது காதலனுடன்தான் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்தப் பெண் தனது பிடிவாதத்தை கைவிடாததால், அவரது விருப்பப்படியே காதலனுடன் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர். இதற்கிடையில் அந்தப் பெண்ணின் கணவர் அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தனது மனைவி காணாமல் போனபோது மூன்று 3 கர்ப்பிணியாக இருந்ததாகவும், காதலனின் பேச்சைக் கேட்டு அவர் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தனது மனைவி மற்றும் அவரது காதலன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.