சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள புகழ்பெற்ற மஸ்ஜித் அல்-ஹராம் (புனித மசூதி) வளாகத்தில், வெளிநாட்டு நபர் ஒருவர் மேல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த நபர் கீழே விழுந்தபோது தனது கைகளால் அவரைப் பிடித்துத் தடுத்தார்.
சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபரின் வேகத்தை அந்த வீரர் தன் உடலால் தாங்கியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த வீரமிக்க மீட்பு நடவடிக்கை அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
🕋🚨 A security guard at the Masjid al-Haram rushed to intervene after a person tried to take their own life by jumping off the upper floors of the masjid.
The security guard was injured while trying to prevent the person from hitting the ground. Both individuals were… pic.twitter.com/NnpveIE8wf
— • (@Alhamdhulillaah) December 25, 2025
“>
இந்த விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர் மற்றும் தற்கொலைக்கு முயன்ற நபர் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புனிதமான மெக்கா மசூதியில் நடந்த இந்த தற்கொலை முயற்சி மற்றும் அதைத் தடுத்த வீரரின் சமயோசித புத்தி சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. காவல்துறை இது குறித்து வழக்குப்பதிவு செய்து அந்த நபர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
