உறைபனிக் குளிரிலும் தனது குழந்தையைப் பாதுகாக்கத் தந்தை ஒருவர் மேற்கொள்ளும் நெகிழ்ச்சியான போராட்டம் குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது.

கடும் குளிர் நிலவும் நள்ளிரவு நேரத்தில் ஆள் அரவமற்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அந்தத் தந்தை பின்னால் அமர்ந்திருக்கும் தனது பிஞ்சு குழந்தையைக் குளிரிலிருந்து காப்பதற்காகத் தான் போர்த்தியிருக்கும் சால்வையால் அக்குழந்தையையும் சேர்த்து அணைத்தபடி வாகனத்தைச் செலுத்தும் காட்சி பார்ப்பவர்களை நெகிழச் செய்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by ghantaa (@ghantaa)

ஒருபுறம் சாலைப் போக்குவரத்தைக் கவனித்துக் கொண்டே மறுபுறம் தன் குளிர்ச்சியைக் கூடப் பொருட்படுத்தாமல் குழந்தையின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் அந்தத் தந்தையின் பொறுப்புணர்வு பெற்றோரின் அளப்பரிய தியாகத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பல மில்லியன் கணக்கான மக்களால் பகிரப்பட்டு வரும் இந்தக் காணொளி உறவுகளில் பெற்றோருக்கு நிகராக யாரையும் ஒப்பிட முடியாது என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.