உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில், சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரை வெறிபிடித்த காளை ஒன்று முட்டப் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவேசத்துடன் ஓடி வந்த அந்தக் காளையிடமிருந்து சிறுமி தப்பிக்க முயன்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தனது வாகனத்தைச் சிறுமிக்கும் காளைக்கும் இடையே குறுக்காக ஓட்டிச் சென்று தடுத்துள்ளார்.
रायबरेली : मासूम बच्ची पर सांड ने किया हमला
➡सामने से गुजर रहे बाइक सवार ने बचाया
➡महराजगंज कोतवाली क्षेत्र के कस्बे की घटना#RaeBareli #BullAttack #ChildRescue #Maharajgan pic.twitter.com/azINHH0D9R— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) December 24, 2025
அவரது இந்தச் சமயோசித செயலால் காளையின் கவனம் திசைதிருப்பப்பட்டு, சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த நபரின் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அதேவேளையில், நகரின் முக்கிய வீதிகளில் சுற்றித் திரியும் தெருக் காளைகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
