சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘குறிஞ்சி’ இல்லத்தில் இன்று மாலை 4:00 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாநில துணைச் செயலாளர்களும் முன்னிலை வகிக்கின்றனர்.
இளைஞரணியின் அடுத்தகட்ட ஆக்கப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதால், அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
