இமாச்சலப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கும் மருத்துவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சை தொடர்பாக நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் பின்னர் சண்டையாக மாறியுள்ளது.

 

அப்போது, மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த நோயாளி, மருத்துவரை உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், படுக்கையில் இருந்த நோயாளியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் அங்கு இருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மருத்துவமனை போன்ற அமைதியான இடத்தில் இவ்வாறான வன்முறை சம்பவம் நடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.