2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த நிலையில், மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் இது குறித்துப் பேசுகையில் சிவகார்த்திகேயன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ஆரம்ப காலத்தில் தனக்கு உதவிய பலரை மறந்துவிட்டதாகவும், துரோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, ‘கோட்’ திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்ததன் மூலம் அவருக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது என்றும், விஜய்க்குப் பிறகு சிவகார்த்திகேயன் தான் என்ற பிம்பம் உருவான நிலையில், தற்போது விஜய்யின் படத்துடனேயே நேரடியாகத் தனது படத்தைப் போட்டியிட வைப்பது நன்றியற்ற செயல் என்றும் அந்தணன் விமர்சித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் முன்னதாக ரஜினி மற்றும் அஜித் படங்களில் நடிக்க முயற்சித்து வாய்ப்பு கிடைக்காத சூழலில், விஜய் அவருக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அவர் மதிக்கவில்லை என்பது அந்தணனின் கருத்தாக உள்ளது.இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளித்துள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் இதில் எந்த இடத்தில் நன்றியை மறந்தார் என்று கேள்வி எழுப்பிய அவர், ஒரே நாளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது ஒன்றும் புதிதல்ல என்றும், அது ஆரோக்கியமான போட்டிதான் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு நடிகர் தனது படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வது வியாபாரம் சார்ந்த விஷயம் என்றும், இதற்காக அவரை ‘நன்றி மறந்தவர்’ என்று முத்திரை குத்துவது நியாயமற்றது என்றும் அவர் வாதிட்டுள்ளார். இதனால்சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்தணனின் பேச்சை வைத்து விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து வரும் நிலையில், திருப்பூர் சுப்பிரமணியனின் கருத்தைச் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்தணனின் பேச்சை வைத்து விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து வரும் நிலையில், திருப்பூர் சுப்பிரமணியனின் கருத்தைச் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
