சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, கார் பிரியர்களையும் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நபர் தனது கடின உழைப்பால் வாங்கிய புதிய ‘மகிந்திரா ஸ்கார்பியோ-என்’ காரின் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் பொறாமை காரணமாக வேண்டுமென்றே கீறல்களை ஏற்படுத்தி சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும் காரின் முன்பக்க பானட் முதல் மேற்கூரை வரை அனைத்து இடங்களிலும் மிக மோசமான முறையில் கீறல்கள் போடப்பட்டுள்ளன. நீண்ட கால சேமிப்பு மற்றும் கனவுகளுடன் வாங்கப்பட்ட ஒரு வாகனம் இத்தகைய வன்மத்திற்கு ஆளானது காண்போரின் மனதை உருக்குவதாக உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kumar Shubham (@shubham_mr.fit)

“>

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில், காரின் உரிமையாளர் தனது வேதனையை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். “ஒருவர் தனது வாழ்க்கையில் முன்னேற முடியாவிட்டால், உழைத்து முன்னேறுபவர்களின் பொருட்களை இப்படி சேதப்படுத்துவது முறையல்ல” என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் குணமே இத்தகைய கீழ்த்தரமான செயல்களுக்குக் காரணம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, மனசாட்சியற்ற இச்செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.