சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஆழமான அன்பையும் பிணைப்பையும் அழகாகப் படம்பிடித்துள்ளது. ஜாக்கிருதி சஹாய் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அவரது தாய் முதன்முறையாக பெங்களூருவில் உள்ள தனது மகனைச் சந்திக்க தனியாக ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்.
மேலும் சுமார் 20 நாட்கள் வீட்டை விட்டுப் பிரியப்போகும் உற்சாகம் தாயின் முகத்தில் தெரிந்தாலும், இத்தனை ஆண்டுகாலம் ஒரு தூணாக குடும்பத்தைத் தாங்கிப் பிடித்த அவர் இல்லாதது அந்த வீட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த வீடியோ உணர்த்துகிறது.
View this post on Instagram
“>
இந்தக் காணொளியில் மிகவும் உருக்கமான அம்சம் என்னவென்றால், ஜாக்கிருதியின் தந்தை காட்டிய அமைதியான வெளிப்பாடுதான். “அம்மா இல்லாமல் எப்படி சமாளிப்பீர்கள்?” என்று மகள் கேட்கும்போது, அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாக நிற்கிறார்.
அந்த மௌனம் அவர் தன் மனைவி மீது வைத்துள்ள அளவற்ற அன்பையும், அவர் இல்லாத நாட்களில் உணரப்போகும் தனிமையையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் உரக்கச் சொல்கிறது. இரயில் நிலையம் வரை வந்து, மனைவியின் உடமைகளைச் சுமந்து, அவர் இரயிலில் ஏறும் வரை கையைப் பிடித்துத் துணை நின்ற அந்தத் தந்தையின் அமைதி, இணையவாசிகளைப் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
