சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலையில் சாமி படங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில், தம்பதி போல வந்த இருவர் சாமி படத்தை நூதன முறையில் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடை உரிமையாளர் செந்தில்குமார் மதிய உணவுக்காக வீட்டிற்குச் சென்றிருந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம தம்பதி, கடையில் இருந்த ஒரு சிறிய முருகன் படத்தை எடுத்துத் தங்களது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர் உரிமையாளர் வந்தவுடன், அவரிடம் பேச்சு கொடுத்து 5 சாமி படங்களை வாங்கிய அவர்கள், அதற்கான பணத்தை ‘ஜி-பே’ (G-Pay) மூலம் அனுப்பிவிட்டதாகப் பொய் கூறிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.

“>

 

நீண்ட நேரமாகியும் வங்கிக்குத் தொகை வராததால் சந்தேகமடைந்த செந்தில்குமார், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் தன்னிடம் பேசுவதற்கு முன்பே ஒரு படத்தை மறைமுகமாகத் திருடியது அம்பலமானது. தற்போது இந்தத் திருட்டு குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.