கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்திற்கு கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி வந்தபோது, பிரபலங்களின் தலையீட்டால் சாதாரண ரசிகர்கள் அவரைப் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த குளறுபடிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிதான் காரணம் என்றும், அவரே இடைத்தரகராகச் செயல்பட்டார் என்றும் அர்ஜென்டினா ரசிகர் மன்றத் தலைவர் உத்தம் சாஹா குற்றம் சாட்டினார். இதனால் அதிருப்தியடைந்த கங்குலி, தன் மீதான பொய்ப் புகாருக்காக ரூ. 50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கிற்கு அஞ்சாத உத்தம் சாஹா, “இது கால்பந்து மைதானம், யாராக இருந்தாலும் விடமாட்டோம்” எனத் துணிச்சலாக சவால் விடுத்துள்ளார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். மெஸ்ஸி இந்தியா வந்து சென்றாலும், அவர் கிளப்பிய இந்த விவாத நெருப்பு கொல்கத்தாவில் இன்னும் தணியாமல் உள்ளது.
