நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன். இவர் கட்சியில் மகளிர் அணி நிர்வாகி ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்து கூறி காணொளிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த காணொளிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதனை தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர். மேலும் அவரை பதவி நீக்கம் செய்ததாக கூறி பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.