இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்ற நிலையில் தமிழகத்திலும் அந்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் தமிழகத்தில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி முகவரி மாற்றம், இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தகுதி வாய்ந்தவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை அது தொடர்பாக விண்ணப்பிக்கலாம். ஏனெனில் பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்பதால் அதற்கு முன்னதாக விடுபட்டவர்கள் தங்களுடைய பெயரை விண்ணப்பித்து கொள்வது கட்டாயம்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் அறிவித்துள்ளார். மேலும் முன்னதாக தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இறந்த நிலையில் தற்போது 5.43 கோடி ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் எத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற பட்டியலும் வெளிவந்துள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக நீக்கப்பட்ட வேட்பாளர்களின் விவரங்கள் இதோ,
#BREAKING | தமிழ்நாட்டில் SIRக்குப் பிறகு மாவட்ட வாரியாக எத்தனை வாக்குகள் நீக்கம்?#SunNews | #SIREffect | #TamilNadu | #ElectionCommission pic.twitter.com/08BPGKXqhX
— Sun News (@sunnewstamil) December 19, 2025
