இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்ற நிலையில் தமிழகத்திலும் அந்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் தமிழகத்தில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் அறிவித்துள்ளார். மேலும் முன்னதாக தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இறந்த நிலையில் தற்போது 5.43 கோடி ஆக குறைந்துள்ளது.
இதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2,15,025 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்னதாக வேலூர் மாவட்டத்தில் 13,03,030 பேர் இருந்த நிலையில் இந்த பணிகளுக்குப் பிறகு 10,88,005 வாக்காளர்களாக குறைந்துள்ளனர். மேலும் இதில் முத்து அமைச்சரான துரைமுருகனின் காட்பாடி பகுதியில் மட்டும் சுமார் 35,666 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியான ராயபுரத்தில் 51,711 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
