அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “செங்கோட்டையன் என்ற தனி மனிதர் வெளியேறியதால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும், “இத்தனை காலம் அதிமுகவில் இருந்தவர், இந்த வயதில் மற்றொரு கட்சியில் சேர்ந்து அந்தத் தலைவரை வாழ்த்திவிட்டு மீண்டும் எம்.எல்.ஏ ஆக வேண்டுமா?” என்று அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பினார். செங்கோட்டையனின் இந்த முடிவைச் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
