ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று (டிசம்பர் 18) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்  எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

கரூர் விபத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதன்முறையாகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், “திரைப்படங்கள், புகழ் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காகவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்; அத்தகைய என்னை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள்” என்று உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், தனக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருக்கும் கொள்கைப் பட்டாளமே தனது பலம் என்று குறிப்பிட்ட அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முழங்கினார். இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.