வங்காளதேசத்தின் டாக்காவில் உள்ள BRAC பல்கலைக்கழகத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தில் மாணவர்கள் எஸ்கலேட்டரை (நகரும் படிக்கட்டு) பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஸ்கலேட்டர் திடீரென அதிக வேகமெடுத்துள்ளது. இந்த எதிர்பாராத வேக அதிகரிப்பால் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
நல்ல வேளையாக, இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. அதிவேகமாக நகரும் எஸ்கலேட்டரிலிருந்து மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கி விட்டனர். இந்தச் சம்பவத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.
