ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இலங்கை நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரனா, ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
யார்க்கர் பந்துகளை அதிகமாய் வீசும் இவர், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்பதால், இவரை வாங்கப் பல அணிகள் போட்டியிட்டன. 23 வயதான மதிஷா பதிரனாவின் அடிப்படை விலையே ரூ.2 கோடி ஆகும்.
பலத்தப் போட்டிக்குப் பிறகு, இறுதியாக இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ரூ.18 கோடிக்குத் தன் வசப்படுத்தியது. இதற்கு முன்னதாக, பதிரனாவைச் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரூ.20 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கியிருந்தாலும், மினி ஏலத்திற்கு முன்னதாக அவரை விடுவித்துவிட்டது. சிஎஸ்கே விடுவித்த மதிஷா பதிரனா, இப்போது ரூ.18 கோடிக்கு ஏலம் போய் தன்னுடைய மதிப்பை நிரூபித்துள்ளார்.
