ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது துபாய் அபுதாபியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கொல்கத்தா அணி பத்திரனாவை 18 கோடிக்கு வாங்கியுள்ளது. முன்னதாக 23.25 கோடிக்கு கேமரூன் கிரீனையும் ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோயை 7.2 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.
சென்னை அணி ஏலத்தில் முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹூசனை எடுத்துள்ளது. மேலும் இவரை 2 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ள நிலையில் கேமரூன் கிரீன் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்ட நிலையில் ஏலத்தொகை அதிகமானதால் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய வீரர் ஆகிப் நபியை 8.40 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
