நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு வாக்காளர் தீவிரப்பட்டியலான SIR பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணிகள் சமீபத்தில் தமிழ்நாட்டில் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை 6.14 கோடி வாக்காளர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் 18 வயது நிரம்பிய வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பது மற்றும் இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவுகளை நீக்குதல் போன்றவைகள் ஆகும்.

இந்த நிலையில் புதுச்சேரியில் SIR பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது 85,531 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 7.66 லட்சம் பேர் இடம்பெற்றுள்ள நிலையில் சுமார் 10.5% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால் ஜனவரி 15ஆம் தேதி வரை பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளது.