கிரிக்கெட் களத்தில் இந்திய – பாகிஸ்தான் வீரர்களிடையே விரோதப் போக்கு நிலவி வரும் நிலையில், நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைப் போட்டியில் ஒரு மனிதாபிமானச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொதுவாக, இரு வாரியங்களின் அறிவுறுத்தலின்படி, வீரர்கள் கைகுலுக்குவதைத் தவிர்க்கும் சூழலில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் கிஷன் குமார் சிங் என்பவர், பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹுசைஃபா அஹ்சனின் ஷூ லேஸைக் கட்டிவிட உதவி செய்து விளையாட்டு உணர்வுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்
Handshakes are too diplomatic, but tying a fellow cricketer’s shoe is fine.
Wara hypocrisy man… pic.twitter.com/l6jhglaOyM— Hanan (@Maliksahaab_0) December 14, 2025
.
இந்தப் போட்டிக்கு முன்பும், பின்பும் இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த நிலையில், இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
முன்னர் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஷூ லேஸ் கட்டிய சம்பவங்கள் இருந்தாலும், இப்போது அந்தச் சூழல் பகைமை நிறைந்ததாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்தப் போட்டியில் இந்திய U-19 அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஹுசைஃபா அஹ்சன் தனி ஆளாக 70 ரன்கள் எடுத்துப் போராடியது குறிப்பிடத்தக்கது.
