தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வரும் நிலையில் தேர்தல் பணிகளையும் முடிக்கி விட்டுள்ளது. அந்த வகையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் கூட்டணி தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, கண்டிப்பாக எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோம் என்றார்.

அதன் பிறகு 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டிகள் நிலவும். கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க எங்களுக்கு இன்னும் டைம் இருக்கிறது. பிப்ரவரி மாதம் வரையில் அதை நாங்கள் முடிவு செய்யலாம் என்றார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இடம் பெற்றிருந்த நிலையில் அதிமுக இணைவுக்கு பிறகு அவர் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் அடுத்து வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒரு செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.