சமீப நாட்களாகத் திருமணங்கள் கடைசி நேரத்தில் நின்றுபோகும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்றது பேசுபொருளானது. இந்தூரில் மட்டும் கடந்த 40 நாட்களில் சுமார் 150 திருமணங்கள் நின்றுள்ளதாக ஒரு ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நடந்த ஆய்வில், திருமணங்கள் நிற்பதற்கு ஒரு பெரிய காரணம் தெரிய வந்துள்ளது.

​இந்தத் திருமணங்களில் 62% நின்றுபோக முக்கியக் காரணம், மணமகன் அல்லது மணமகள் தங்கள் பழைய காதலன் (அ) காதலியுடன் சாட் (Chat) செய்ததும், சமூக வலைதளங்களில் பேசியதும்தான். திருமணத்துக்குத் தயாராகும் சமயத்தில், துணைக்கு உண்மையாக இல்லாமல் ரகசியமாகப் பழைய உறவைத் தொடர்வது கண்டுபிடிக்கப்பட்டு, திருமணங்கள் முறிந்துவிடுகின்றன. எனவே, மண வாழ்க்கை சிறப்பாக இருக்க, துணைக்கு உண்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.