தமிழக அரசு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டம் குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், மாநிலத்தில் உள்ள சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்கள் நேரடியாகப் பயனடைய வாய்ப்புள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன வழங்கப்படும், எவ்வளவு ரொக்கம் அளிக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அவர்களே அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.