ஐ.எல்.டி20 (ILT20) கிரிக்கெட் போட்டியில், விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் செய்த ஒரு செயல் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிராக எம்.ஐ. எமிரேட்ஸ் அணி விளையாடியபோது, மெதுவாக ஆடிக்கொண்டிருந்த பேட்ஸ்மேன் மேக்ஸ் ஹோல்டனை ஸ்டம்பிங் செய்ய பூரனுக்கு மிக எளிதான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் அந்த ஸ்டம்பிங்கைச் செய்யாமல், ஹோல்டனை மீண்டும் கிரீஸுக்குள் செல்ல அனுமதித்தார்.
இது விதிகளுக்கு உட்பட்ட ஒரு தந்திரமான முடிவு என்று கிரிக்கெட் வல்லுநர்கள் விவாதித்தாலும், சமூக வலைத்தளங்களில் சிலர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ (Match Fixing) குற்றச்சாட்டுகளை எழுப்பினர். பூரனின் இந்த முடிவுக்குப் பின்னரும், எதிரணியான வைப்பர்ஸ் நிர்வாகம், ஹோல்டனை விதிகளின்படி ‘ஓய்வு பெற்றார்’ (Retired Out) என்று அறிவித்து, வேகமான வீரரான சாம் கரணை உள்ளே அனுப்பியது.
Tactics? Oneupmanship?
Nicholas Pooran chose not to stump Max Holden, but the Vipers had a trick up their sleeve as well, retiring the batter the very next ball.
What do you make of this? 👇#DPWorldILT20 #AllInForCricket #WhereTheWorldPlays pic.twitter.com/CPK4D0H4lW
— International League T20 (@ILT20Official) December 9, 2025
இந்தத் தந்திரம் அவர்களுக்குச் சாதகமாக அமைய, எம்.ஐ. எமிரேட்ஸ் அணி இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் கீரான் பொல்லார்ட், கடைசி ஓவர்களில் சரியாக ஆடாததே தோல்விக்கான காரணம் என்று ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம், டி20 கிரிக்கெட்டில் உத்தி சார்ந்த முடிவுகள் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதே சமயம் வீண் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
