சத்தியமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக செயலாளரான என்.என்.சிவராஜ் உட்பட 500க்கும் மேற்பட்டோர் அண்மையில் கட்சியில் இருந்து விலகி தவெக .வில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அவர்கள் தவெக.வில் இணைந்தனர். நடிகர் விஜய்யின் அரசியல் பரப்புரை ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் செங்கோட்டையன் மாற்றுக் கட்சியினரைத் தங்கள் கட்சிக்குள் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் இருந்து விலகியவர்கள், “கே.ஏ.எஸ். (செங்கோட்டையன்) யார் பக்கம் கை காட்டுகிறாரோ, அவருக்கே எங்கள் வாக்கு” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சி தாவல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் விலகிச் சென்றது அதிமுகவுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.