இந்தியாவில் காவல்துறையின் பொதுப் பிம்பம் பல ஆண்டுகளாகப் பல விதமாக இருந்து வருகிறது. சிலர் காவல்துறையினரின் மனிதாபிமான அணுகுமுறையை அனுபவித்தாலும், சிலர் அவர்களது கண்டிப்பான நடைமுறைகள் குறித்த காணொலிகளைப் பகிர்வதுண்டு. இந்நிலையில், மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த ஒரு உள்ளடக்கத்தை உருவாக்குபவர், இரு காவலர்களிடம் சென்று, சற்றும் எதிர்பாராத விதமாக இருநூறு ரூபாய் பணம் கேட்டு உதவிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ankit Vlog’s Bhopal (@ankit_vlogs_bhopal)

ஹெல்மெட் கேமராவில் இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்த அந்த வ்ளாக்கர், சாலையோரம் நின்றிருந்த காவலர்களை அணுகி, தாங்கள் ஜபல்பூரில் இருந்து வருவதாகவும், பில்ஹான் என்ற கிராமத்திற்குச் செல்ல இருநூறு ரூபாய் தேவைப்படுவதாகவும் கேட்டுள்ளார். மேலும், தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் பெட்ரோல் போடப் பயன்படுத்தியதால், தங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்த பயனர்கள், விளாக்கரின் துணிச்சலை ஒருபுறம் பாராட்டினாலும், பெரும்பாலானோர் அந்தக் காவலர்களின் மனிதநேயத்தை மெச்சியுள்ளனர். வ்ளாக்கர் கேட்டதும், அங்கிருந்த இரு காவலர்களும் சற்றும் யோசிக்காமல் தங்கள் பங்களிப்பாக இருநூறு ரூபாயைக் கொடுத்து உதவி செய்துள்ளனர்.

பணத்தைப் பெற்ற வ்ளாக்கர், விரைவில் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த காணொலியை ‘@ankit_vlogs_bhopal’ என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், இதுவரை முப்பத்தைந்து இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது. மேலும், ‘காவல்துறை பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டது’, ‘இன்று ஒரு காவலரின் மனிதநேயத்தைச் சோதித்ததில் வெற்றி’ என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.