இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது நீண்ட நாள் காதலரான இசை அமைப்பாளர் பலஷ் முச்சலுடன் (Palash Muchhal) நடக்க இருந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்குப் பிறகு, நவம்பர் 23ஆம் தேதி இவர்களதுத் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் திடீரெனத் திருமணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.
பலஷ் முச்சல் வேறு ஒருப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் தான் ஸ்மிருதி திருமணத்தை நிறுத்திவிட்டார் என்றுச் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. ஸ்மிருதி மந்தனாவும் பலஷுடன் தொடர்புடையத் திருமணப் புகைப்படங்களை நீக்கிவிட்டு, இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்வதையும் நிறுத்தினார்.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்குப் பலஷ் முச்சல் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார். அதில், “வதந்திகளின் அடிப்படையில் ஒருவரைத் தீர்மானிக்கும் முன் யோசிக்க வேண்டும். ஆதாரமில்லாத வதந்திகளைப் பரப்பினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
