உத்தரப் பிரதேசம், வாரணாசியில் (Varanasi) உள்ள ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர் மீது, அவரிடம் பயிற்சி பெறும் இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை (Rape) செய்ததாகப் புகார் அளித்துள்ளனர்.
14 மற்றும் 15 வயதுடைய இந்தச் சிறுவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு, அவர்களதுப் பெற்றோருக்கு இந்தச் சம்பவம் தெரிய வந்துள்ளது.
பயிற்சியாளர் கௌதம் என்பவர், லக்னோவில் நடைபெறும் கிரிக்கெட் தேர்வுக்காக (Selection) மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றுச் சிறுவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
वाराणसी : पुलिस ने एक क्रिकेट कोच को दो किशोर खिलाड़ियों के साथ यौन उत्पीड़न करने के आरोप में किया गिरफ्तार
◆ दो लड़कों को मुफ्त कोचिंग और टीम में सिलेक्शन का दिया था लालच
◆ कोच मुरारीलाल एक क्रिकेट एकेडमी चलाता है#Varanasi | Varanasi | #UttarPradesh | Uttar Pradesh pic.twitter.com/9qpSIdYJuZ
— News24 (@news24tvchannel) December 7, 2025
அப்போது, ஒரு சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு, மற்றொரு சிறுவனிடமும் தொடர்ந்து மூன்று நாட்களாக இந்தப் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றுப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பிலுபூர் (Bhelupur) காவல் நிலையத்தில் பயிற்சியாளர் மீது உடனடியாக வழக்குப்பதிவு (FIR) செய்யப்பட்டு, விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
