இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் புதுடெல்லியில் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே இருந்த வர்த்தக விரிசல், அமெரிக்காவின் சமீபத்திய செயல்பாடுகளால் மெல்ல மெல்லச் சுமூகமாகி வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் மோடியைத் தனது சிறந்த நண்பர் எனக் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சில வரிகள் குறைக்கப்படும் என்றும் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், சுமூகமான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.